'பேரனை காப்பாற்றும் தாத்தா கதையா ஜெயிலர். ரஜினியின் பேரன் யார்..!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ’ஜெயிலர்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் கதை குறித்து பல்வேறு தகவல்கள் இணையத்தில் வசித்து வந்தாலும் இந்த படம் தாத்தா -பேரன் கதையம்சம் கொண்டது என்று கோலிவுட்டில் தற்போது கிசுகிசுக்கப்படுகிறது.
ஜெயிலராக பணிபுரிந்து ஓய்வு பெற்ற ரஜினிகாந்தின் மகன் வசுந்தரவி என்றும் அவர் போலீஸ் அதிகாரியாக நடித்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் வசந்த ரவியின் மகன் வில்லன் குழுவால் கடத்தப்படுகிறார் என்றும் அப்போது அவனது தாத்தாவும் மாஜி ஜெயிலருமான ரஜினிகாந்த் களத்தில் இறங்கி பேரனை எப்படி காப்பாற்றுகிறார் என்பதுதான் இந்த படத்தின் கதை என்றும் கூறப்படுகிறது.
ரஜினியின் பேரனை கடத்தும் வில்லன் கேரக்டரில் பிரபலமாக மலையாள நடிகர் விநாயகன் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. ’ஜெயிலர்’ படத்தின் கதை இதுதானா என்பதை படம் வெளியாகும் வரை பொறுத்து இருந்து பார்ப்போம்.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், நெல்சன் இயக்கத்தில், அனிருத் இசையில் உருவாகி இருக்கும் ‘ஜெயிலர்’ திரைப்படத்தில் ரஜினிகாந்த், சிவராஜ்குமார், மோகன்லால், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், சுனில், ஜாக்கி ஷெராப், வசந்த் ரவி, விநாயகன், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, உட்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவும், நிர்மல் படத்தொகுப்பும் செய்துள்ளனர்.