ஒரு முடிவோட தான் இருக்காங்க போல.. அமலாபாலின் லேட்டஸ்ட் கிளாமர் போட்டோஷூட் ..!

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை நடிகை அமலாபால் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்த நிலையில் தற்போது அவருக்கு வாய்ப்பு இல்லாமல் உள்ளது. இந்த நிலையில் மீண்டும் தமிழ் திரை உலகில் வாய்ப்பை பெற்று, முன்னணி நடிகையாக வேண்டும் என்று முடிவு செய்துள்ள அமலா பால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிளாமர் போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கூட ’பாஸ்கர் ஒரு ராஸ்கல்’’ ராட்சசன்’ ’ஆடை’ போன்ற வெற்றி படங்களை அமலா பால் கொடுத்து வந்த நிலையில் கடந்த ஆண்டு அவரது நடிப்பில் மற்றும் தயாரிப்பில் வெளியான ’கடாவர்’ என்ற திரைப்படமும் நல்ல வரவேற்பு பெற்றது.

இந்த நிலையில் மீண்டும் தமிழ் திரை உலகில் ஒரு சுற்று வர வேண்டும் என்று முடிவு செய்துள்ள அமலாபால் கடந்த சில நாட்களாகவே கிளாமர் புகைப்படங்களையும் வீடியோக்களையும் தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்து வருகிறார்.

அவை மிகப்பெரிய அளவில் வைரலாகி வரும் நிலையில் சற்றுமுன் அவர் உமன் டார்ஜான் பாணியில் எடுத்த கிளாமர் போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படங்களுக்கு ஒரு லட்சத்துக்கும் அதிகமான லைக்ஸ் குவிந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து மீண்டும் தமிழ் திரை உலகில் அமலாபால் ரீஎண்ட்ரி ஆவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


