இந்த ஒரு காரணத்தால் தற்கொலை முயற்சி செய்தாரா நடிகை பூஜா ஹெக்டே- ஷாக்கான ரசிகர்கள்.
முகமூடி படத்தில் நாயகியாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்திற்கு வந்தவர் நடிகை பூஜா ஹெக்டே. தமிழில் கடைசியாக விஜய்யுடன் பீஸ்ட் படத்தில் நடித்தார், ஆனால் படம் சரியான வரவேற்பு பெறவில்லை.
ஹிந்தி மற்றும் தெலுங்கு மொழிகளிலும் அடுத்தடுத்து படங்கள் நடித்துவரும் பூஜா சமீபகாலமாக சரியான ஹிட் கொடுக்கவில்லை.
பிரபாசுடன் நடித்த 'ராதே ஷியாம்' தெலுங்கு, இந்தி மொழிகளில் வெளியாகி தோல்வி கண்டது, சிரஞ்சிவியுடன் நடித்த 'ஆச்சார்யா' படமும் நஷ்டமானது.
அடுத்து வந்த சர்க்கஸ் என்ற இந்தி படமும் ஓடவில்லை, அண்மையில் மகேஷ்பாபு ஜோடியாக புதிய படத்தில் நடிப்பதாக இருந்தது, ஆனால் இப்போது அப்படமும் கைவிட்டு போனது.
அடுத்தடுத்து தோல்வி படங்களை கொடுத்து வரும் பூஜா ஹெக்டேவை முன்னணி நாயகர்கள் ஒதுக்குகிறார்கள் என்றும் இதனால் மன உளைச்சலில் தற்கொலைக்கு முயன்றதாகவும், பின் உடனே குடும்பத்தினர் காப்பாற்றியதாகவும் மும்பையை சேர்ந்த ஒருவர் டுவிட்டரில் பதிவு வெளியிட்டு இருந்தார்.
இதனால் கோபமான பூஜா ஹெக்டே சமூக வலைதளத்தில் தன்னைப்பற்றி அவதூறு பதிவிட்டதாக அந்த நபருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.
