கார்த்தியின் 27வது படத்தை இயக்கப்போகும் வெற்றி இயக்குனர்!.. யாரும் எதிர்பார்க்காத கூட்டணி.
வித்தியாசமான கதைகளில் நடித்து ரசிகர்களை கவர்ந்து வருபவர் கார்த்தி. இவர் நடிப்பில் ராஜு முருகன் இயக்கத்தில் ஜப்பான் படம் உருவாகி வருகிறது. இதில் ஹீரோயினாக அனு இமானுவேல் நடிக்கிறார்.
சமீபத்தில் ஜப்பான் படத்தின் டீசர் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலானது.
இந்நிலையில் கார்த்தியின் 27 வது படத்தை 96 படத்தின் இயக்குனர் பிரேம் குமார் இயக்கவுள்ளார். இதில் முக்கியமான கதாபாத்திரத்தில் பிரபல நடிகர் அரவிந்த்சாமி நடிக்கிறார்.
மேலும் இப்படத்தை சூர்யாவின் 2டி எண்டெர்டைன்மெண்ட் நிறுவனம் தயாரிப்பதாக சமூக வலைத்தளங்களில் அறிவித்துள்ளனர்.
