சாந்தனு உங்க அப்பா என்ன ஜாதி? முக்கிய நபரின் கேள்வியால் அதிர்ந்து போன நடிகர்

சாந்தனு உங்க அப்பா என்ன ஜாதி? முக்கிய நபரின் கேள்வியால் அதிர்ந்து போன நடிகர்

நடிகர் பாக்கியராஜின் மகன் சாந்தனு தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக இருந்து வருகிறார். அவர் விஜய்யின் மாஸ்டர் உள்ளிட்ட பல படங்களில் சின்ன சின்ன ரோல்களில் நடித்தாலும் ஹீரோவாகவும் தொடர்ந்து நடித்து வருகிறார்.

சமீபத்தில் இராவண கோட்டம் என்ற படம் சாந்தனு நடிப்பில் வெளியானது. அந்த படத்தின் ஷூட்டிங்கிற்காக ராமநாதபுரத்தில் இருக்கும் ஒரு கிராமத்திற்கு சென்ற போது நடந்த சம்பவத்தை சாந்தனு தெரிவித்து இருக்கிறார்.

அந்த கிராமத்தில் இருக்கும் ஒரு பள்ளிக்கு சென்றபோது அங்கிருந்த ஹெட்மாஸ்டர் சாந்தனுவிடம் பேசினாராம். பாக்கியராஜ் மகன் என்றதும் பார்க்க மக்கள் அதிகம் கூடிவிட்டார்கள்.

அந்த நேரத்தில் சாந்தனுவுக்கு பள்ளி ஹெட் மாஸ்டர் காபி கொண்டு வரும்படி உதவியாளரிடம் கூறி இருக்கிறார். அவர் காபி கொண்டு வந்து கொடுக்கும் முன்பு 'உங்க அப்பா என்ன ஆளுங்க' என வெளிப்படையாகவே ஜாதியை பற்றி கேட்டிருக்கிறார்.

அதிர்ச்சி ஆன சாந்தனுவும் ஜாதியை சொல்லி இருக்கிறார். அதன் பின் தான் காபி அவர் கைக்கு வந்ததாம்.  

LATEST News

Trending News

HOT GALLERIES