லியோ படத்தில் சந்தனம் கதாபாத்திரமா? உண்மையை போட்டு உடைத்த விஜய் சேதுபதி!
விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் லியோ திரைப்படம் குறித்து தினமும் பல அப்டேட்களை தெரிவித்து வருகிறோம்.
இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தீவிரமாக நடந்து வருகிறது. இப்படம் வருகிற அக்டோபர் மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சில மாதங்களுக்கு முன்பு லியோ படத்தின் ஷூட்டிங்கில் ரத்ன குமார், விக்ரம் படத்தில் விஜய் சேதுபதி போட்டு இருந்த கண்ணாடியை புகைப்படம் எடுத்து பதிவிட்டார். இதனால் விஜய் சேதுபதி லியோ படத்தில் நடிக்கிறார் என்று ரசிகர்கள் கூறி வந்தனர்.
இந்நிலையில் இது குறித்து பேசிய விஜய் சேதுபதி, "நான் விஜய்யின் லியோ படத்தில் நடிக்கவில்லை. ரத்ன குமார் ஏன் இது போன்று புகைப்படம் பதிவிட்டார் என தெரியவில்லை" என்று கூறியுள்ளார்.