திருமணத்திற்காக மதம் மாறினேனா? நெட்டிசன்களுக்கு பதிலடி கொடுத்த குஷ்பு..!

திருமணத்திற்காக மதம் மாறினேனா? நெட்டிசன்களுக்கு பதிலடி கொடுத்த குஷ்பு..!

நடிகை குஷ்பு திருமணத்திற்காக மதம் மாறியதாக நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் பதிவு செய்து வரும் நிலையில் அந்த பதிவுக்கு நடிகை குஷ்பு பதிலடி கொடுத்துள்ளார்.

தமிழ் திரையுலகில் கடந்த 90 களில் முன்னணி நடிகையாக இருந்தவர் நடிகை குஷ்பு. இவர் இயக்குனர் சுந்தர்சியை காதலித்து கடந்த 1993 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு இரண்டு மகள்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் திடீரென நடிகை குஷ்பு திருமணத்திற்காக மதம் மாறினார் என்று நெட்டிசன்கள் சமூக வலைதளங்களை பதிவு செய்து வரும் நிலையில் அதற்கு குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிலடி கொடுத்துள்ளார்.

எனது திருமணத்தை பற்றி கேள்வி கேட்பவர்கள், நான் என் கணவரை திருமணம் செய்ய மதம் மாறிவிட்டேன் என்று கூறுபவர்கள், தயவுசெய்து கொஞ்சம் அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள். நம் நாட்டில் இருக்கும் சிறப்பு திருமணம் சட்டம் குறித்து அவர்கள் கேள்விப்பட்டதே இல்லை என்பது துரதிஷ்டமே. திருமணத்திற்காக நான் மதம் மாறவும் இல்லை, மதம் மாற என்னை யாரும் வற்புறுத்தவும் இல்லை. எனது 23 வருட திருமண நம்பிக்கை மரியாதை, சமத்துவம் மற்றும் அன்பின் அடிப்படையில் உருவானது என்று தெரிவித்துள்ளார். குஷ்புவின் இந்த பதிவு வைரல் ஆகி வருகிறது.

LATEST News

Trending News

HOT GALLERIES