கார் விபத்தில் சிக்கிய சூப்பர் சிங்கர் ரக்‌ஷிதா!

கார் விபத்தில் சிக்கிய சூப்பர் சிங்கர் ரக்‌ஷிதா!

விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் 6 வது சீசனில் நிகழ்ச்சியின் மூலம் பாப்புலர் ஆனவர் தான் ரக்‌ஷிதா. இதையடுத்து இசைப்புயல் ஏ. ஆர் ரகுமான் இசையமைப்பில் பல பாடல்களை பாடி வருகிறார்.

இந்நிலையில் சோசியல் மீடியா பக்கத்தில் ஆக்ட்டிவாக இருந்து வரும் ரக்‌ஷிதா சுரேஷ், தற்போது தனது இன்ஸ்டாகிராமில் ஷாக்கிங் செய்தியை பகிர்ந்துள்ளார்.

அதில் அவர், "நான் சமீபத்தில் பெரிய விபத்தைச் சந்தித்தேன்.  அப்போது என்னுடைய ஒட்டு மொத்த வாழ்க்கையும் அந்த 10 நொடியில் வந்து போனது".

"காரில் இருந்த ஏர் பேக்கால் உயிர் தப்பித்தேன். சில சின்ன காயங்களுடன் உயிர் தப்பினோம் என்று நினைக்கும் போது சந்தோசமா இருக்கிறது" என்று பதிவிட்டுள்ளார்.   

LATEST News

Trending News

HOT GALLERIES