எனக்கு சம்மதம் தான், ஆனால்... திருமணம் செய்ய விருப்பம் தெரிவித்த ரசிகருக்கு பிக்பாஸ் ரேஷ்மா பதில்..!
பிக் பாஸ் போட்டியாளர் மற்றும் பாக்கியலட்சுமி சீரியல் நடிகை ரேஷ்மாவை திருமணம் செய்ய ரசிகர் ஒருவர் விருப்பம் தெரிவித்த நிலையில் எனக்கு விருப்பம் தான், ஆனால்.. என பதில் அளித்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
‘வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’ உள்பட ஒரு சில திரைப்படங்களில் நடித்த ரேஷ்மா தற்போது பாக்கியலட்சுமி உட்பட ஒரு சில சீரியல்கள் தற்போது நடித்து வருகிறார். பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகா என்ற கேரக்டரில் நாயகன் இரண்டாவது மனைவியாக நடித்து வரும் இவரது கேரக்டர் கொஞ்சம் வில்லத்தனம், கொஞ்சம் குணசித்திர கேரக்டராக இருக்கும்.
இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் ரேஷ்மா ரசிகர்களுடன் அவ்வப்போது உரையாடுவார். அந்த வகையில் சமீபத்தில் அவர் ரசிகர்களுடன் உரையாடிய போது ஒரு ரசிகர் அவரை திருமணம் செய்து கொள்ள விருப்பம் தெரிவித்தார். அதற்கு பதில் அளித்த ரேஷ்மா ’எனக்கு திருமணம் செய்து கொள்ள விருப்பம் தான், ஆனால் எனது அம்மா அனுமதிக்க மாட்டார்’ என்று தெரிவித்தார். இந்த பதில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.