மறைந்த நடிகர் மனோபாலாவுக்கு நேரில் மரியாதை செலுத்திய விஜய்..!

மறைந்த நடிகர் மனோபாலாவுக்கு நேரில் மரியாதை செலுத்திய விஜய்..!

நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் மனோபாலா இன்று திடீரென காலமான நிலையில் அவருக்கு நடிகர் விஜய் நேரில் சென்று இறுதி மரியாதை செய்த வீடியோ இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகர் மற்றும் இயக்குனர் மனோபாலா உடல்நலக்குறைவு காரணமாக கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சையின் பலன் இன்றி இன்று காலமானார்.

அவரது மறைவிற்கு தமிழக முதல்வர் முக ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, உலகநாயகன் கமலஹாசன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உட்பட பல பிரபலங்கள் தங்களது சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்தனர்.

இந்த நிலையில் நடிகர் விஜய் இன்று மனோபாலா உடல் வைக்கப்பட்டு இருக்கும் இடத்திற்கு சென்று நேரில் தனது இறுதி மரியாதை செலுத்தினார். இது குறித்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் விஜய் மற்றும் மனோபாலா பல படங்களில் இணைந்து நடித்துள்ளனர் என்பதும் மனோபாலா மீது மிகுந்த மரியாதை வைத்திருப்பவர்களில் ஒருவர் விஜய் என்பது குறிப்பிடத்தக்கது.

LATEST News

Trending News

HOT GALLERIES