அஜித், விஜய், விக்ரம் பட வில்லன் இறந்ததாக வதந்தி.. அவரே அளித்த விளக்கம்..!

அஜித், விஜய், விக்ரம் பட வில்லன் இறந்ததாக வதந்தி.. அவரே அளித்த விளக்கம்..!

அஜித், விஜய், விக்ரம் உள்பட பல பிரபலங்களின் படங்களில் வில்லனாக நடித்த நடிகர் ஒருவர் இறந்து விட்டதாக சமூக வலைதளங்களில் வதந்தி பரவிய நிலையில் அவரே இதற்கு வீடியோ ஒன்றின் மூலம் விளக்கம் அளித்துள்ளார்.

தமிழ் திரை உலகில் விக்ரம் நடித்த ’சாமி’ என்ற திரைப்படத்தில் பெருமாள் பிச்சை என்ற வில்லன் கேரக்டரில் கலக்கியவர் நடிகர் கோட்டா ஸ்ரீநிவாசராவ். இவர் தமிழில் விஜய் நடித்த ’திருப்பாச்சி’ அஜித் நடித்த ’பரமசிவன்’ சிம்பு நடித்த ’குத்து உள்பட பல படங்களில் நடித்துள்ளார் என்பதும் தமிழ் மட்டுமின்றி ஏராளமான தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னட திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகராக மட்டுமின்றி அரசியல்வாதியாகவும் இருந்தார் என்பதும் பாஜகவில் இணைந்த இவர் ஐந்து ஆண்டுகள் எம்எல்ஏவாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது 75 வயதான கோட்டா ஸ்ரீனிவாச ராவ் திடீரென இறந்து விட்டதாக சமூக வலைதளங்களில் வதந்தி பரவியது

இதனை அடுத்து ரசிகர்கள் அவரது வீட்டிற்கு இரங்கல் தெரிவிக்க படையெடுத்த நிலையில் கோட்டா சீனிவாச ராவ் அதிர்ச்சி அடைந்தார். இதனை அடுத்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் தன்னுடைய மரணம் குறித்து வெளியான செய்தி பொய்யானது என்றும் ரசிகர்கள் யாரும் அதை நம்ப வேண்டாம் என்றும் நான் நலமுடன் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். தயவுசெய்து இத்தகைய வதந்திகளை பரப்ப வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

LATEST News

Trending News

HOT GALLERIES