விஜய் டிவி ஜாக்குலினா இவர்? சிங்கப்பூரில் எடுக்கப்பட்ட கிளாமர் புகைப்படங்கள்..!

விஜய் டிவி ஜாக்குலினா இவர்? சிங்கப்பூரில் எடுக்கப்பட்ட கிளாமர் புகைப்படங்கள்..!

விஜய் டிவி பிரபலம் ஜாக்லின் தற்போது சிங்கப்பூர் சுற்றுப்பயணம் செய்திருக்கும் நிலையில் அங்கிருந்து கொண்டு அவர் பதிவு செய்யும் கிளாமர் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய ’கலக்கப்போவது யாரு’ என்ற நிகழ்ச்சியில் தொகுப்பாளராக அறிமுகமான ஜாக்குலின் அதன் பிறகு ’தேன்மொழி’ என்ற தொலைக்காட்சி தொடரில் நடித்தார். மேலும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த ’கோலமாவு கோகிலா’ என்ற திரைப்படத்தில் அவருக்கு சகோதரியாக நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய் டிவியின் தொகுப்பாளினி மற்றும் தொலைக்காட்சி தொடர் நடிகையான ஜாக்குலின் சமீப காலமாக இன்ஸ்டாகிராமில் விதவிதமான புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார் என்பதை பார்த்து வருகிறோம்.

அந்த வகையில் தற்போது அவர் சிங்கப்பூர் சென்று இருக்கும் நிலையில் அங்கு இருக்கும் யுனிவர்சல் ஸ்டூடியோ உள்பட பல இடங்களில் எடுத்த கிளாமர் புகைப்படங்களை பதிவு செய்துள்ள நிலையில் இந்த புகைப்படங்களுக்கு ஆயிரக்கணக்கான லைக்ஸ் குவிந்து வருகிறது.

LATEST News

Trending News

HOT GALLERIES