'பாத்துக்கலாம்' : அதிதிஷங்கரை மறைமுகமாக தாக்குகிறாரா தமிழ் நடிகை?

'பாத்துக்கலாம்' : அதிதிஷங்கரை மறைமுகமாக தாக்குகிறாரா தமிழ் நடிகை?

பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் மகளுக்கு அடுத்தடுத்து பெரிய நடிகர்களுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்து வருவதை ’பாத்துக்கலாம்’ என தமிழ் நடிகை ஒருவர் தனது டுவிட்டரில் பதிவு செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதிஷங்கர் தனது முதல் படத்திலேயே கார்த்தி ஜோடியாக ’விருமன்’ படத்தில் நடித்தார். இதன் பின்னர் சிவகார்த்திகேயன் நடிக்கவிருக்கும் ’மாவீரன்’ என்ற திரைப்படத்தில் நாயகியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். மேலும் சிம்புவின் அடுத்த படத்திலும் அதிதிஷங்கர் தான் கதாநாயகி என்று கூறப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் அடுத்தடுத்து பெரிய நடிகர்களின் படங்களில் கமிட்டாகி வரும் அதிதிஷங்கரை மறைமுகமாக குறிப்பிட்டுள்ள நடிகை ஆத்மிகா தனது டுவிட்டர் பக்கத்தில் ’செல்வாக்கு உள்ளவர்களுக்கு பெரிய ஏணி எளிதில் கிடைக்கிறது, மற்றவர்களுக்கு அது கிடைக்கவில்லை, பார்த்துக்கலாம் என்று பதிவு செய்துள்ளார்

இந்த பதிவுக்கு நெட்டிசன்கள் பல்வேறு கமெண்ட்ஸ்களை பதிவு செய்துவருகின்றனர். பிரபலமானவர்களின் வாரிசுகளுக்கு வாய்ப்புகள் வேண்டுமானால் எளிதில் கிடைக்கலாம் ஆனால் அதை தக்க வைத்துக் கொள்ள வேண்டுமானால் திறமையை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்பது போன்ற கமெண்ட்ஸ் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.

LATEST News

Trending News

HOT GALLERIES