சிம்புவை திருமணம் செய்ய தயார், ஆனால்... பிரபல சீரியல் நடிகையின் பதிவு

சிம்புவை திருமணம் செய்ய தயார், ஆனால்... பிரபல சீரியல் நடிகையின் பதிவு

நடிகர் சிம்புவுக்கு திருமணம் எப்போது நடக்கும்? யாருடன் நடக்கும் என அவரது ரசிகர்கள் காத்திருக்கும் நிலையில் அவருடன் நடித்த நடிகை ஒருவர் சிம்புவை விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தமிழ் தொலைக்காட்சி சீரியல் நடிகை ஒருவர் சிம்புவை தான் திருமணம் செய்ய தயார் என்றும், ஆனால் எனக்கும் ஒரு ஆள் இருக்கிறது என்று பதிவு செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

’யாரடி நீ மோகினி’ உள்பட ஒரு சில தொடர்களில் நடித்த நடிகை ஸ்ரீநிதி சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ‘ஒருநாள் அனைவருக்கும் திருமணம் ஆகியிருக்கும், நானும் சிம்புவும் மட்டும் தான் மீதம் இருப்போம்’ என்று குறிப்பிட்டிருந்தார். இதற்கு ஒரு ரசிகர் ’நீங்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளலாமே? என கேள்வி எழுப்பிய போது அதற்கு ’செய்துகொள்ளலாம் தான், நல்ல ஐடியா தான், ஆனால் எனக்கு என்று ஒரு ஆள் இருக்கிறதே’ என்று பதில் அளித்து இருந்தார். அவரது இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

நடிகை ஸ்ரீநிதி கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அஜித் நடித்த ’வலிமை’ திரைப்படம் குறித்து தனது கருத்தை தெரிவித்ததற்கு அஜித் ரசிகர்கள் கடுமையாக விமர்சனம் செய்தனர் என்பதும் இதனால் அவர் அதிருப்தி அடைந்து கொடுத்த பேட்டி வைரல் ஆனது என்பதும் தெரிந்ததே.

LATEST News

Trending News

HOT GALLERIES