சமந்தாவின் 4 மொழி படம்: டைட்டில் மற்றும் ரிலீஸ் தேதி அறிவிப்பு

சமந்தாவின் 4 மொழி படம்: டைட்டில் மற்றும் ரிலீஸ் தேதி அறிவிப்பு

தமிழ், தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தாவின் அடுத்த படத்தின் டைட்டில் மற்றும் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரபல தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா உடன் சமந்தா ஒரு திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பதும், இந்த படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்று வருவதாகவும் வெளியான செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய நான்கு மொழிகளில் உருவாகி வரும் இந்த படத்திற்கு ’குஷி’ என டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக சமந்தா தனது சமூக வலைத்தளத்தில் அறிவித்துள்ளார். மேலும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகி உள்ள நிலையில் இந்த போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது.

ஷிவா நிர்வானா என்பவரின் இயக்கத்தில் மைத்திரி மூவிஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படம் டிசம்பர் 23-ஆம் தேதி கிறிஸ்துமஸ் விருந்தாக வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே சமந்தாவின் ‘யசோதா’ திரைப்படம் வரும் ஆகஸ்ட் 12ஆம் தேதி சுதந்திர தின விருந்தாக ரிலீஸாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

LATEST News

Trending News