நடிகை மஞ்சுவாரியர் பாடிய முதல் தமிழ்ப்பாடல்: ஏ.ஆர்.முருகதாஸ் அறிவிப்பு
பிரபல மலையாள நடிகை மஞ்சுவாரியர் முதல் முறையாக ஒரு தமிழ் பாடலை பாடி உள்ளதாக பிரபல இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்
பிரபல ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குனர் சந்தோஷ் சிவன் இயக்கி வரும் திரைப்படம் ’ஜாக் அண்ட் ஜில்’. மலையாளத்தில் உருவாகி வரும் இந்தப் படம் தமிழில் ’சென்டிமீட்டர்’ என்ற பெயரில் உருவாகியுள்ளது. இந்த படத்தின் டிரைலரை சமீபத்தில் இயக்குனர் மணிரத்னம் வெளியிட்ட நிலையில் இன்று இந்த படத்தில் இடம்பெற்ற பாடல் ஒன்று வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்த அறிவிப்பை இயக்குனர் ஏஆர் முருகதாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த பாடலை முதல் முறையாக நடிகை மஞ்சுவாரியார் தமிழில் பாடி உள்ளார் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த படத்தில் மஞ்சுவாரியர் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
’சென்டிமீட்டர்’ படத்தின் இயக்கம் மற்றும் ஒளிப்பதிவு பணியை சந்தோஷ்சிவன் கவனித்த நிலையில் ஜேக்ஸ் பிஜாய், ராம் சுரேந்தர் மற்றும் கோபி சுந்தர் ஆகியோர் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார்கள். இந்த படம் விரைவில் ரிலீஸாகவுள்ளது.
— A.R.Murugadoss (@ARMurugadoss) May 14, 2022