நெகட்டிவ் விமர்சனங்களை மீறி கோடிகளை குவிக்கும் 'பீஸ்ட்': 2 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

நெகட்டிவ் விமர்சனங்களை மீறி கோடிகளை குவிக்கும் 'பீஸ்ட்': 2 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

தளபதி விஜய் நடித்த ‘பீஸ்ட்’ திரைப்படம் நேற்று முன்தினம் வெளியான நிலையில் முதல் காட்சி முடிந்தவுடன் நெகட்டிவ் விமர்சனங்கள் குவியத் தொடங்கிவிட்டன. இருப்பினும் இந்த படத்தின் வசூல் மட்டும் குறையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

முதல் நாளில் ‘பீஸ்ட்’ திரைப்படம் தமிழகத்தில் மட்டும் 35 முதல் 40 கோடி ரூபாய் வசூல் செய்ததாகவும் உலக அளவில் 80 கோடி ரூபாய் வசூல் செய்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் இந்த படத்தின் 2 நாள் வசூல் தற்போது 130 கோடியை தாண்டி விட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன

ஒருபக்கம் நெகடிவ் விமர்சனங்கள் குவிந்து கொண்டிருந்தாலும் இன்னொரு பக்கம் இந்த படம் கோடிகளை குவித்து வருகிறது என்பது விஜய் ரசிகர்களுக்கு மகிழ்ச்சிக்குரிய தகவல். மேலும் உலக அளவில் மிக விரைவாக ரூ.100 கோடி வசூல் செய்த ரஜினியின் ’2.0’ படத்தை அடுத்து இரண்டாவது இடத்தில் ‘பீஸ்ட்’ திரைப்படம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நேற்று யஷ் நடித்த ‘கேஜிஎப் 2 திரைப்படம் தமிழகத்தில் சுமார் 200 திரையரங்குகளில் வெளியான போதிலும் ‘பீஸ்ட்’ திரைப்படத்தின் வசூல் குறையவில்லை என்று டிரேடிங் வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. இந்த நிலையில் இன்று அல்லது நாளை போல் ‘பீஸ்ட்’ படம் 200 கோடி ரூபாய் வசூலை எட்டிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

LATEST News

Trending News