ஹீரோ, வில்லன் உள்பட பலருக்கும் இரட்டை வேடம்: 'விஷால் 33' படத்தில் ஒரு புதுமை!

ஹீரோ, வில்லன் உள்பட பலருக்கும் இரட்டை வேடம்: 'விஷால் 33' படத்தில் ஒரு புதுமை!

விஷால் நடிக்க இருக்கும் 33வது படத்தில் ஹீரோ, வில்லன் உள்பட அந்த படத்தில் நடிக்கும் முக்கிய கேரக்டர்கள் அனைவருமே இரட்டை வேடத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

விஷால் மற்றும் எஸ் ஜே சூர்யா இணைந்து நடிக்கும் திரைப்படத்தை இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க உள்ளார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த படம் ’எனிமி’ உள்பட சில படங்களை தயாரித்த வினோத் குமார் தயாரிப்பில் உருவாக உள்ளது. ஜிவி பிரகாஷ் இசையமைப்பில் உருவாகயிருக்கும் இந்த படம் தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் என ஐந்து மொழிகளில் உருவாக உள்ளது.

‘மார்க் ஆண்டனி’ என டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் விஷால், எஸ் ஜே சூர்யா மட்டுமின்றி இந்த படத்தில் நடிக்கவுள்ள முக்கிய நட்சத்திரங்கள் அனைவருமே இரட்டை வேடத்தில் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. இந்த படம் பீரியட் கதை அம்சம் மற்றும் நிகழ்கால கதை அம்சம் என இரண்டும் கலந்தவை என்பதால் பீரியட் கதையில் உள்ள நடிகர்கள் அனைவருமே நிகழ்கால கதையிலும் வருவதால் கிட்டத்தட்ட அனைத்து நடிகர்களும் இரட்டை வேடத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது.

LATEST News

Trending News

HOT GALLERIES