வாழ்த்து கூறிய சமந்தாவுக்கு நன்றி கூறிய சூர்யா!

வாழ்த்து கூறிய சமந்தாவுக்கு நன்றி கூறிய சூர்யா!

நடிகர் சூர்யாவுக்கு நடிகை சமந்தா வாழ்த்து கூறிய நிலையில் சமந்தாவுக்கு தனது நன்றியை சூர்யா சமூக வலைதளம் மூலம் தெரிவித்துள்ளார்.

சூர்யா தயாரிப்பில் அருண் விஜய்யின் மகன் அர்னவ் நடித்துள்ள ’ஓ மை டாக்’ திரைப்படம் வரும் 21ம் தேதி ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாக உள்ளது. இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன

இந்த நிலையில் சற்று முன்னர் ’ஓ மை டாக்’ திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியானது. இந்த ட்ரெய்லரில் ஒரு சிறுவனுக்கும் அவன் ஆசையாய் வளர்க்கும் நாய் குட்டிக்கும் உள்ள பந்தம், அந்த நாய்க்குட்டியை சிறுவனிடம் இருந்து பிரிக்க செய்யும் சதி மற்றும் தந்திரம் ஆகிய காட்சிகள் உள்ளன.

இந்த நிலையில் இந்த டிரைலரை பார்த்த நடிகை சமந்தா தனது சமூக வலைதளத்தில் ’ஒரு நட்பை மிகவும் அழகாக கூறிய படம்’ என்றும் கூறி தனது வாழ்த்தை தெரிவித்து உள்ளார். இந்த வாழ்த்துக்கு நன்றி என சூர்யாவுக்கு சொந்தமான 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

விஜயகுமார், அருண்விஜய், அர்னவ் என ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று தலைமுறையினர் நடித்துள்ள இந்த படம் சரத் சண்முகம் இயக்கத்தில் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ளது.

LATEST News

Trending News

HOT GALLERIES