பிரபல நடிகையுடன் இணைந்து நடிக்கும் லாஸ்லியா

பிரபல நடிகையுடன் இணைந்து நடிக்கும் லாஸ்லியா

கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமான நடிகை லாஸ்லியா, தற்போது பல படங்களில் ஒப்பந்தம் ஆகி வருகிறார்.

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானவர் லாஸ்லியா. இவர் தற்போது ‘அன்னபூர்ணி’ என்ற படத்தில் நடிக்கிறார். இவருடன் ஜெய்பீம் படம் மூலம் பலருடைய கவனத்தை ஈர்த்த லிஜோமோல் ஜோஸ், நடிக்கிறார். மேலும் இவர்களுடன் மெட்ராஸ், ரைட்டர் படங்களில் நடித்த ஹரி கிருஷ்ணன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

 

கே.எச்.பிக்சர்ஸ் சார்பாக தயாரிப்பாளர் ஹரி பாஸ்கர், ஓடிஓ பிக்சர்ஸ் சார்பாக தயாரிப்பாளர் நேதாஜி இணைந்து தயாரிக்க, லயோனல் ஜோசுவா இப்படத்தை இயக்குகிறார்.

 

லாஸ்லியா - ஹரி கிருஷ்ணன் - லிஜோமோல் ஜோஸ்

லாஸ்லியா - ஹரி கிருஷ்ணன் - லிஜோமோல் ஜோஸ்

 

திரில்லர் டிராமாவாக உருவாகும் அன்னபூர்ணி படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார். பிரபல பாடலாசிரியர் யுகபாரதி இப்படத்திற்கு வசனங்களும் பாடல்களும் எழுதுகிறார். சென்னை மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெறுகிறது.

LATEST News

Trending News

HOT GALLERIES