'மணி ஹெய்ஸ்ட்', 'கூர்கா' படங்களின் காப்பியா 'பீஸ்ட்'? நெல்சன் விளக்கம்
தளபதி விஜய் நடித்த ‘பீஸ்ட்’ திரைப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியான நிலையில் இந்த ட்ரைலரை வைத்து, ‘மால் ஒன்றை தீவிரவாதிகள் தங்களுடைய கட்டுப்பாட்டில் கொண்டு வந்து, அங்கிருந்த மக்களைப் பணயக் கைதியாக வைத்து கொண்டு, தங்களுடைய கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்று டிமாண்ட் வைப்பதுதான் கதை என்பது புரிய வந்துள்ளது.
இந்த நிலையில் இந்த படத்தின் கதை, யோகி பாபு நடித்த ’கூர்கா’ படத்தின் கதை போல் இருக்கிறது என்றும் அதேபோல் நெட்பிளிக்ஸில் வெளியான ’மணி ஹெய்ஸ்ட்’ தொடர் போல் இருக்கிறது என்றும் சமூக வலைதளங்களிலும் ஒரு சில ஊடகங்களிலும் செய்திகள் வெளியானது.
இந்த செய்திகளை அடுத்து இயக்குனர் நெல்சன் விளக்கம் அளித்துள்ளார். மக்கள் நடமாட்டம் ஒரு ஷாப்பிங் மாலை ஹ்சிஜாக் செய்யும் கதை சினிமாவுக்கு புதிது இல்லை என்றாலும் சொல்லப்படும் விதத்தில், காட்சிகள் உருவாக்கத்தில் தான் ‘பீஸ்ட்’ திரைப்படம் வேறுபடுகிறது. நானும் ‘கூர்கா’ படத்தையும் பார்த்துள்ளேன். அந்த படத்தின் கதைக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அதே போல் ’மணி ஹெய்ஸ்ட்’தொடருக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
பொதுவாக என்னுடைய திரைப்படங்களில் டிரெய்லர் ஒரு மாதிரியாகவும் படங்கள் வேறு மாதிரியாகவும் இருக்கும். அதே போல் தான் ‘பீஸ்ட்’ படமும் இருக்கும் என்பதை நீங்கள் படம் பார்க்கும்போது உணர்வீர்கள்.
விஜய்யே என்னை அழைத்து எனக்காக ஒரு கதை பண்ணுங்கள் என்று கூறிய பிறகு அவருக்காக உருவாக்கப்பட்டதுதான் ‘பீஸ்ட்’ கதை என்றும் அவருடைய முந்தைய படங்களிலிருந்து முற்றிலும் வித்தியாசமாகவும், அவரது ரசிகர்களை முழு அளவில் திருப்தி செய்யும் படமாகவும் ‘பீஸ்ட்’ இருக்கும் என்றும் இயக்குனர் நெல்சன் தெரிவித்துள்ளார்.