சூர்யாவின் அடுத்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
சூர்யா நடித்த ’எதற்கும் துணிந்தவன்’ என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது என்பதும் இதனை அடுத்து தற்போது அவர் பாலா இயக்கத்தில் உருவாகி வரும் ‘சூர்யா 41’ திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு கன்னியாகுமரி அருகே விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே
இந்த நிலையில் சூர்யா தயாரிப்பில் உருவாகி வந்த ’ஓ மை டாக்’ என்ற படத்தின் ரிலீஸ் தேதியை அவர் தனது சமூக வலைத்தளத்தில் அறிவித்துள்ளார். இந்த படம் ஏப்ரல் 21ஆம் தேதி அமேசான் பிரைமில் ரிலீஸ் ஆக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது
பிரபல நடிகர் அருண் விஜய்யின் மகன் அர்னவ் முக்கிய வேடத்தில் நடிக்கும் இந்த திரைப்படத்தில் விஜயகுமார் மற்றும் அருண்விஜய் ஆகியோர் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளனர். விஜயகுமார், அருண் விஜய், அர்னவ் என ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று தலைமுறை நடிகர்கள் இந்த படத்தில் நடித்தது சிறப்புக்குரியதாகும்
இந்த படத்தை சரத் சண்முகம் என்பவர் இயக்கியுள்ளார் என்பதும் சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படம் ஒரு சிறுவனுக்கும் அந்த சிறுவன் வளர்க்கும் நாய்க்கும் இடையே உள்ள பாச பந்தம் தான் படத்தின் கதை என்பதும் குறிப்பிடத்தக்கது.