ஆக்ஷன் ஹீரோவாக களமிறங்கும் மோகன்
80களில் முன்னணி நடிகராக வலம் வந்த மோகன், தற்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஆக்ஷன் ஹீரோவாக களமிறங்கி இருக்கிறார்.
கோயம்புத்தூர் எஸ்.பி.மோகன் ராஜ் மற்றும் ஜி மீடியா ஜெயஸ்ரீ விஜய் இணைந்து தயாரித்து, விஜய் ஸ்ரீ இயக்கத்தில் உருவாகும் மோகனின் 'ஹரா' படத்தின் படப்பிடிப்பு சென்னையில் பூஜையுடன் தொடங்கியது.
இயக்குனர் விஜய் ஸ்ரீ, தயாரிப்பாளர்கள் எஸ்பி மோகன் ராஜ், ஜெயஸ்ரீ விஜய், தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர். இந்த படத்தின் முதல் நாள் படப்பிடிப்பில் சண்டைக்காட்சி படம்பிடிக்கப்பட்டது. இதில் மோகன் உற்சாகமாக கலந்துகொண்டார்.
சென்னையில் படப்பிடிப்பு முடிந்தவுடன், கோயம்புத்தூர் மற்றும் ஊட்டியில் படப்பிடிப்பை தொடங்க இருக்கிறார்கள். இதுவரை மோகனை பல்வேறு கதாபாத்திரங்களில் பார்த்து ரசித்து மக்கள் கொண்டாடியது போல, 'ஹரா' படத்திலும் அவரது கதாபாத்திரம் மிகவும் பேசப்படும் என்று படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.