அவர் என்னை வேண்டாம் என சொல்லிவிட்டார்: மஞ்சிமா மோகன் பதிவு!
அவர் என்னை வேண்டாம் என சொல்லி விட்டார் என மஞ்சிமா மோகன் பதிவு செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ், மலையாள திரையுலகின் நடிகை மஞ்சிமா மோகன், நடிகர் கௌதம் கார்த்திக்கை காதலிப்பதாக வெளிவந்த செய்திக்கு சமீபத்தில் மறுப்பு தெரிவித்தார் என்பதை பார்த்தோம்.
இந்த நிலையில் மஞ்சிமா மோகன், விஷ்ணு விஷாலுடன் நடித்த ‘எப்.ஐ.ஆர்’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து இந்த படத்தின் இயக்குனர் மனுஆனந்த் அடுத்த படத்திற்கு தயாராகிவிட்டார். இதனை அடுத்து மனு ஆனந்திடம் உதவி இயக்குநர்களாக பணி புரியும் வாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இந்த அறிவிப்பை தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்திருந்த மஞ்சிமா மோகன், மனு ஆனந்திடம் உதவி இயக்குனராக சேர விரும்புபவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார். மேலும் நான் ஏற்கனவே இதற்காக விண்ணப்பித்தேன் என்றும் ஆனால் என்னை வேண்டாம் என்று அவர் சொல்லிவிட்டார் என்றும் மஞ்சிமா பதிவு செய்துள்ளார்.
மஞ்சிமாவின் இந்த பதிவுக்கு பதில் கூறிய மனு ஆனந்த், ’நான் உங்களுடைய விண்ணப்பத்தை பெறவில்லை என்றும் ஒருவேளை இமெயிலில் அது தவறி இருக்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.