சந்தானத்துடன் இணைந்த மாஸ்டர் பிரபலம்

சந்தானத்துடன் இணைந்த மாஸ்டர் பிரபலம்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் சந்தானத்துடன் மாஸ்டர் பட பிரபலம் இணைந்துள்ளார்.

சந்தானத்துடன் இணைந்த மாஸ்டர் பிரபலம்

சந்தானம்

காமெடி நடிகராக இருந்து தற்போது முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் சந்தானம். இவர் நடிப்பில் டிக்கிலோனா மற்றும் சபாபதி ஆகிய படங்கள் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இவர் ஏஜென்ட் கண்ணாயிரம் என்ற படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இப்படம் தெலுங்கில் நவீன் பொலிசெட்டி நடிப்பில் கடந்த 2019 ஆண்டு வெளியான ஏஜென்ட் சாய் ஸ்ரீநிவாசா ஆத்ரேயா படத்தின் தமிழ் ரீமேக்காகும். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இந்தப் படத்தை மனோஜ் பீதா இயக்கி வருகிறார். 

 

ரத்னகுமார்

ரத்னகுமார்

 

இந்நிலையில் சந்தானம் அடுத்து நடிக்கவிருக்கும் படம் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேயாத மான், ஆடை ஆகிய படங்களை இயக்கிய எம்.ரத்னகுமார் இயக்கும் புதிய படத்தில் சந்தானம் நடிக்கவுள்ளார். இப்படத்திற்கு 'குலுகுலு'  என பெயரிடப்பட்டுள்ளது. 

 

சந்தானம் படத்தின் போஸ்டர்

சந்தானம் படத்தின் போஸ்டர்

 

இப்படத்தை ராஜ் நாராயணன் தயாரிக்க, சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். குலுகுலு படத்தின் மோஷன் போஸ்டரை வெளியிட்டுள்ள படக்குழு அனைவரின் பாராட்டுக்களையும் பெற்று வருகிறது.

LATEST News

Trending News

HOT GALLERIES