பவுன்சராக களமிறங்கும் தமன்னா
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் தமன்னா, அடுத்ததாக பெண் பவுன்சர் கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார்.
தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியான தமன்னா தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்து இருக்கிறார். தற்போது பாரிஸ் பாரிஸ் என்ற தமிழ் படமும், 5 தெலுங்கு படங்களும், ஒரு இந்தி படமும் கைவசம் உள்ளன.
தெலுங்கு படங்களின் படப்பிடிப்புகள் முடிந்து அடுத்தடுத்து திரைக்கு வர உள்ளன. பாரிஸ் பாரிஸ் படமும் முடிந்துள்ளது. இந்த நிலையில் ‘பப்ளி பவுன்சர்' என்ற இந்தி படத்தில் நடிக்க தமன்னாவை ஒப்பந்தம் செய்துள்ளனர். ஒரு பெண் பவுன்சரின் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களை மையமாக வைத்து தயாராகிறது.
இதில் சவுரப் சுக்லா, அபிஷேக் பஜாஜ், சாஹில் வைத் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் வருகிறார்கள். மது பண்ட்ராக்கர் டைரக்டு செய்கிறார். இந்த படம் தெலுங்கு, தமிழிலும் வெளியாக உள்ளது. தனது படம் 3 மொழிகளில் தயாராவதால் தமன்னா மகிழ்ச்சியில் இருக்கிறார்.