பார்த்திபனின் புதிய படத்தில் 3 ஆஸ்கார் பிரபலங்கள்… எதிர்ப்பார்ப்பில் ரசிகர்கள்!

பார்த்திபனின் புதிய படத்தில் 3 ஆஸ்கார் பிரபலங்கள்… எதிர்ப்பார்ப்பில் ரசிகர்கள்!

தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராகவும் இயக்குநராகவும் ரசிகர்கள் மத்தியில் தனி அடையாளத்தைப் பெற்றிருக்கும் பார்த்திபன் தற்போது “இரவின் நிழல்“ எனும் திரைப்படத்தை இயக்கிவருகிறார். இந்தத் திரைப்படத்தில் ஆஸ்கார் விருதுபெற்ற 3 பிரபலங்கள் இணைந்திருப்பதாகப் படக்குழு அறிவித்து இருக்கிறது.

சமீபத்தில் நடிகர் பார்த்திபன் இயக்கி நடித்திருந்த “ஒத்த செருப்பு“ திரைப்படம் தேசிய விருது பெற்றது. மேலும் ஆஸ்கார் விருது பரிந்துரை பட்டியலில் இடம்பெறும் என எதிர்ப்பார்த்த நிலையில் அது நடக்காமல் போனது. இதையடுத்து நடிகர் பார்த்திபன் “இரவின் நிழல்“ எனும் சவாலான திரைப்படத்தை உருவாக்கி வருகிறார்.

உலக அளவில் முதல் முறையாக சிங்கிள் ஷாட்டடாக Non-Liner கதையமைப்பில் தனது படத்தை உருவாக்கி வருவதாக நடிகர் பார்த்திபன் தெரிவித்துள்ளார். மேலும் இந்தத் திரைப்படத்திற்கு ஆஸ்கர் நாயகன் ஏர்.ஆர்.ரஹ்மான் இசையமைக்க உள்ளதாகத் தகவல் வெளியானதைத் தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் எதிர்ப்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.

இந்நிலையில் இந்தப் படத்தில் இன்னும் 2 ஆஸ்கர் பிரபலங்கள் இடம் பெற்றிருக்கின்றனர் எனும் தகவலை படக்குழு அறிவித்திருக்கிறது. அதில் விஷுவல் எஃபெக்ட்ஸ் மேற்பார்வையாளர் கட்டாலங்கோ லியான் மற்றும் ஒலிக்கோர்ப்பு மேற்பார்வையாளர் கிரெய்க் மான் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இதனால் “இரவின் நிழல்“ திரைப்படம் மூலம் நடிகர் பார்த்திபன் மீண்டும் ஆஸ்கர் விருதுக்கு முயற்சிப்பதாக அவரது ரசிகர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

LATEST News

Trending News