பிரம்மாண்ட படத்தில் சம்பளமே வாங்காமல் வேலைப்பார்த்த அனிருத்… ஏன் தெரியுமா?

பிரம்மாண்ட படத்தில் சம்பளமே வாங்காமல் வேலைப்பார்த்த அனிருத்… ஏன் தெரியுமா?

இந்திய சினிமாவில் முக்கியத்துவம் பெற்ற இயக்குநர்களுள் ஒருவரான எஸ்எஸ் ராஜமௌலிக்காக இசையமைப்பாளர் அனிருத் 5 மொழிகளில் ஒரு பாடலைப் பாடியதாகவும் அதற்கு அவர் எந்தச் சம்பளத்தையும் வாங்கவில்லை என்றும் தகவல் வெளியாகி இருக்கிறது. இதை அவருடைய ரசிகர்கள் உற்சாகத்துடன் பகிர்ந்து வருகின்றனர்.

தெலுங்கு இயக்குநரான எஸ்எஸ் ராஜமௌலி சமீபத்தில் அதிக பான் இந்தியா திரைப்படங்களை உருவாக்கி வருகிறார். அந்த வகையில் தற்போது ஜுனியர் என்டிஆர் மற்றும் ராம் சரணின் கூட்டணியில் “ஆர்ஆர்ஆர்“ திரைப்படத்தை உருவாக்கியிருக்கிறார். ரசிகர்களிடையே அதிக எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்திய இந்தத் திரைப்படத்தின் வெளியீடு கொரோனா காரணமாக தள்ளிக்கொண்டே வந்தது.

தற்போது மார்ச் 25 ஆம் தேதி “ஆர்ஆர்ஆர்“ திரைப்படம் நேரடியாகத் திரைக்கும் வரும் எனும் தகவலை படக்குழு அறிவித்துள்ளது. இந்நிலையில் செய்தியாளருக்கு அளித்த பேட்டியொன்றில் இயக்குநர் ராஜமௌலி, “ஆர்ஆர்ஆ“ திரைப்படத்திற்காக 5 மொழிகளில் அனிருத் பாடிய பாடல் மிக நான்றாக இருந்தது. நட்பைப் பற்றிவரும் இந்த பாடலில் அனிருத் நடிக்கவும் செய்திருக்கிறார். ஆனால் நடிப்பு, பாடல் என எதற்குமே அனிருத் சம்பளம் பெற்றுக்கொள்ளவில்லை.

மேலும் இது உங்கள் மீதுள்ள அன்பிற்காக செய்தேன் என அனிருத் தெரிவித்ததாகவும் ராஜமௌலி குறிப்பிட்டுள்ளார். பிரபல இயக்குநரின் திரைப்படத்தில் அனிருத் சம்பளம் வாங்காமல் வேலைப்பார்த்து இருக்கும் தகவல் தற்போது அவருடைய ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும் 5 மொழிகளில் அனிருத் எப்படி பாடியிருப்பார் என்ற எதிர்ப்பார்ப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது.

LATEST News

Trending News