தனுஷ் படம் குறித்து செல்வராகவன் அப்டேட்
நீண்ட இடைவெளிக்குப் பிறகு செல்வராகவன், தனுஷ் கூட்டணியில் உருவாகி வரும் படத்தின் பணிகள் குறித்து செல்வராகவன் பதிவிட்டிருக்கிறார்.
செல்வராகவன் - தனுஷ்
காதல் கொண்டேன், புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன, இரண்டாம் உலகம் என வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை இயக்கி பிரபலமானவர் செல்வராகவன். இவர் துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன போன்ற படங்களில் நடிகர் தனுஷுடன் இணைந்திருந்தார். அதன் பிறகு இந்த கூட்டணியின் படத்தை பெரிதும் எதிர்பார்த்திருந்த ரசிகர்களுக்கு நானே வருவேன் படத்தின் அறிவிப்பு மூலம் ரசிகர்களை சந்தோஷப்படுத்தினர். யுவன் சங்கர் ராஜா இசையில், கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கும் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்றுவந்தது.
நானே வருவேன்
நடிகர் தனுஷ் தி கிரே மேன்’ என்ற ஹாலிவுட் படத்திலும், செல்வராகவன் ‘சாணிக்காயிதம்’ படத்திலும் நடித்துவந்ததால் நானே வருவேன் படத்தில் சற்று தொய்வு ஏற்பட்டது. இந்நிலையில் இப்படத்தின் பணிகள் மீண்டும் தொடங்கியுள்ளது. இதனை இயக்குனர் செல்வராகவன் அவருடைய வலைத்தளப்பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.
செல்வராகவன் - தனுஷ்
அந்த பதிவில் அவர் குறிப்பிட்டிருப்பது, ”நானே வருவேன் படத்தின் பாடல்களை யுவனுடன் சேர்ந்து முடித்துவிட்டேன். இதனை உங்களிடம் பகிர்ந்து கொள்ளாமல் இருக்க முடியவில்லை” என பதிவிட்டு அத்துடன் ஒரு புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.
Just completed the album of #NaaneVaruven with @thisisysr ! Can't wait to share it with you all! 🤩🤩🥰 @dhanushkraja @theVcreations pic.twitter.com/NT7uE3dQdn
— selvaraghavan (@selvaraghavan) January 31, 2022