விஜய் வழக்கு - உயர்நீதிமன்றம் புதிய உத்தரவு

விஜய் வழக்கு - உயர்நீதிமன்றம் புதிய உத்தரவு

சொகுசு கார் வாங்கிய விவகாரத்தில் விஜய் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது.

நடிகர் விஜய் வெளிநாட்டில் இருந்து சொகுசு கார் ஒன்றை இறக்குமதி செய்திருந்தார். இந்த காருக்கான இறக்குமதி வரி விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். நடிகர் விஜய் தாக்கல் செய்திருந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி, நடிகர்களுக்கு எதிராக கடுமையான கருத்துக்களை தெரிவித்திருந்தார்.

 

அதன்பின் கட்ட வேண்டிய வரி பாக்கியை செலுத்திவிட்டார். இருப்பினும், உயர்நீதிமன்ற தனி நீதிபதி கருத்து தனிப்பட்ட முறையில் தன்னை புண்படுத்தியுள்ளது. 32.30 லட்சம் ரூபாய் கடந்த ஆகஸ்ட் மாதம் செலுத்தப்பட்டு விட்டது. கஷ்டப்பட்ட உழைப்பில் கார் வாங்கப்பட்ட நிலையில், அதை நீதிபதி விமர்சித்திருப்பது தேவையற்றது. தனி நீதிபதியின் கருத்துகளை நீக்க வேண்டும் என விஜய் மனு தாக்கல் செய்திருந்தார். 

 

விஜய்

 

இந்த வழக்கில் நடிகர் விஜய் குறித்து தனி நீதிபதி தெரிவித்த எதிர்மறை கருத்துக்கள் நீக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்நிலையில், தமிழக அரசுக்கு விஜய்க்கு எந்த அடிப்படையில் அபராதம் விதிக்கப்பட்டது? ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது.

LATEST News

Trending News