மகான் படத்தில் சத்தியவானாக பாபி சிம்ஹா - வெளியான புகைப்படம்
விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் இணைந்து நடித்திருக்கும் ‘மகான்’ படத்தில் சத்தியவானாக களம் இறங்கியிருக்கும் பாபி சிம்ஹா இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் பகிர்ந்த புகைப்படம் வைரலாக பரவுகிறது.
பாபி சிம்ஹா
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகி வெளிவரவிருக்கும் படம் 'மகான்'. விக்ரமும் அவருடைய மகனும் இணைந்து நடித்திருப்பதால் படம் பற்றிய எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகம் எழுந்துள்ளது. இப்படத்தில் சிம்ரன், வாணி போஜன், பாபி சிம்ஹா உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் தயாரிக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து பின்னணி வேலைகள் முழுவீச்சில் நடைபெற்று முடிந்து சமீபத்தில் அந்த படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகி, அந்த படம் 10-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
மகான் படத்தின் போஸ்டர்
இந்நிலையில் அந்த படத்தில் பாபி சிம்ஹா நடித்துள்ள கதாப்பாத்திரத்தின் போஸ்டரை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், சத்தியவானாக பாபி சிம்ஹா என்று பதிவிட்டு அந்த கதாப்பாத்திரத்தின் புகைப்படத்தையும் அவர் பகிர்ந்துள்ளார். இது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவிவருகிறது.
Simha as SATHYAVAN in #Mahaan#MahaanOnPrime @actorsimha @7screenstudio @PrimeVideoIN #Sathyavan pic.twitter.com/nFcMccxI6G
— karthik subbaraj (@karthiksubbaraj) January 27, 2022