நாக சைதன்யாவுடன் மீண்டும் இணைகிறாரா? சமந்தாவின் செயலால் ஆச்சரியமடைந்த ரசிகர்கள்!

நாக சைதன்யாவுடன் மீண்டும் இணைகிறாரா? சமந்தாவின் செயலால் ஆச்சரியமடைந்த ரசிகர்கள்!

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நாக சைதன்யாவை பிரிவதாக அறிவித்திருந்த சமந்தா மீண்டும் அவருடன் இணைய போவதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருப்பது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் சமந்தா தனது சமூக வலைதளப் பக்கத்தில் கணவர் நாகசைதன்யாவை பிரிவதாக அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பு சமந்தா மற்றும் நாக சைதன்யா ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

இந்த நிலையில் சமந்தா தனது டுவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் நாக சைதன்யாவை பிரிவதாக அறிவித்திருந்த போஸ்ட்டை டெலிட் செய்துவிட்டார். இதனை அடுத்து அவர் மீண்டும் நாக சைதன்யாவுடன் இணைவாரா என்ற கேள்வியை ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.

ஆனால் அதே நேரத்தில் சமந்தாவை பிரிவதாக நாக சைதன்யா அறிவித்த அறிவிப்பு இன்னும் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உள்ளது. இருப்பினும் சமந்தாதான் பிரிவதாக அறிவித்திருந்த அறிவிப்பை டெலிட் செய்து விட்டதால் மீண்டும் இணைய வாய்ப்பு இருப்பதாகவும் அவ்வாறு இணைந்தால் தங்களுக்கு சந்தோஷம் என்றும் ரசிகர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

LATEST News

Trending News

HOT GALLERIES