திருநங்கையாக நடித்த வாணி கபூர் - குவியும் பாராட்டு

திருநங்கையாக நடித்த வாணி கபூர் - குவியும் பாராட்டு

தமிழ் இந்தி போன்ற மொழி படங்களில் நடித்த வாணி கபூர் இந்தியில் வெளியான சண்டிகர் கரே ஆஷிகி படத்தில் திருநங்கையாக நடித்து அனைவரின் பாராட்டுக்களையும் பெற்றுள்ளார்.

 

ஆஹா கல்யாணம், வார் போன்ற பல மொழி படங்களில் நடித்து புகழ் பெற்றவர் வாணி கபூர். இவர் முன்னணி நடிகர்களுடன் நடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்துவந்திருந்தார். இந்நிலையில் அவர் நடித்த சண்டிகர் கரே ஆஷிகி  படத்தில் திருநங்கையாக நடித்திருந்தார். படத்தில் இவருடைய நடிப்பை அவரின் ரசிகர்கள் மட்டுமல்லாமல் பலரும் பாராட்டியிருக்கிறார்கள். 

 

வாணி கபூர்

வாணி கபூர்

 

 

திருநங்கையாக நடித்த இவருக்கு ஜோடியாக ஆயுஷ்மான் குரானா நடித்திருந்தார். வாணி கபூர் நடிப்புக்குக் குவிந்து வரும் பாராட்டுக்களால் மகிழ்ச்சியில் இருக்கிறார். இது பற்றி அவர் கூறியதாவது, என்னை நம்பி கொடுக்கும் கதாபாத்திரத்தில் என்னால் சிறப்பாக நடிக்க முடியும் என்று நிரூபித்திருக்கிறேன். இனி இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் என்னை நம்புவார்கள். இனி என் திரையுலக வாழ்க்கை பிரகாசிக்கும் என்று கூறியிருக்கிறார்.

LATEST News

Trending News

HOT GALLERIES