லிங்குசாமி இயக்கும் அடுத்த படத்தின் பர்ஸ்ட் லுக்

லிங்குசாமி இயக்கும் அடுத்த படத்தின் பர்ஸ்ட் லுக்

தமிழ் திரையுலகில் பல வெற்றி படங்களை கொடுத்த இயக்குனர் லிங்குசாமியின் அடுத்த பட பர்ஸ்ட் லுக் வெளியாகி வைரலாக பரவிவருகிறது.

 

தமிழ் திரையுலகில் 'ஆனந்தம்' படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் லிங்குசாமி. பிறகு ரன், ஜி, சண்டக்கோழி போன்ற பல படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். 2018 வெளியான சண்டக்கோழி படத்திற்கு பிறகு பெரிய எதிர்ப்பார்ப்பில் காத்திருந்த இவருடைய ரசிகர்களுக்கு இவர் முதன் முறையாக தமிழ், 

 

தெலுங்கு என இரண்டு மொழிகளில் படம் இயக்கப்போகிறார் என்ற அறிவிப்பு வெளியானது. தெலுங்கில் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான 'ராம் பொத்னேனி' கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்திற்கு ராபொ19 என்ற தலைப்போடு படப்பிடிப்பு நடந்து வந்தது. தற்போது இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

 

தி வாரியர் படத்தின் பர்ஸ்ட் லுக்

தி வாரியர் படத்தின் பர்ஸ்ட் லுக்

 

போலீஸ் அதிரியாக நடித்திருக்கும் இப்படத்துக்கு ’தி வாரியர்’ என்ற தலைப்பு வைத்துள்ளனர். மிருகம் ஆதி, கிருத்தி ஷெட்டி, க்ஷரா கவுடா போன்ற பலர் இப்படத்தில் நடிக்கின்றனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசை அமைக்கும் இந்த படத்தை ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்க்ரீன் நிறுவனம் தயாரிக்கிறது. 

LATEST News

Trending News