மகளின் சுட்டித்தனத்தை ரசித்த நடிகை ஸ்ரேயா சரண்: க்யூட் வீடியோ வைரல்
தமிழ் திரையுலகின் பிரபல நடிகைகளில் ஒருவரான ஸ்ரேயா சரண் தனது மகளின் சுட்டித்தனத்தை ரசிக்க்கும் வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள நிலையில் அந்த க்யூட் வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.
ரஜினிகாந்த் நடித்த ’சிவாஜி’ விஜய் நடித்த ’அழகிய தமிழ் மகன்’ விக்ரம் நடித்த ’கந்தசாமி’ தனுஷ் நடித்த ‘திருவிளையாடல் ஆரம்பம்’ உள்பட பல வெற்றித் திரைப்படங்களில் நடித்தவர் நடிகை ஸ்ரேயா சரண். இவர் ரஷ்ய நாட்டு டென்னிஸ் வீரரான ஆண்ட்ரே கோஸ்சீவ் என்பவரை கடந்த 2018-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார் என்பதும் இந்த தம்பதிக்கு கடந்த ஆண்டு பெண் குழந்தை பிறந்தது என்பது குறிப்பிடத்தக்கது. தனக்கு குழந்தை பிறந்ததை பல மாதங்கள் கழித்துதான் ஸ்ரேயா சரண் வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் தனது குழந்தையின் முதல் பிறந்த நாளைக் கொண்டாடும் புகைப்படங்களையும் வீடியோக்களையும் அவர் தனது இன்ஸ்டாகிராம் பதிவு செய்திருந்தார்.
இந்த நிலையில் இன்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் தனது செல்ல மகளின் சுட்டி தனத்தை ரசிக்கும் வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் குழந்தையின் மழலை பேச்சையும் அதில் பதிவு செய்துள்ளார். இந்த பதிவில், ‘எனக்கு நீ எல்லையற்ற மகிழ்ச்சியை தருகிறாய் என்றும், என் இதயம் என்றும் உன்னுடைய தான் என்றும் குறிப்பிட்டுள்ளார். தனது மகளின் சுட்டி தனத்தைப் குறிக்கும் வீடியோ மற்றும் புகைப்படங்களை ஸ்ரேயா சரண் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படங்களும் வீடியோக்களுக்கும் லைக்ஸ், கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.