இனிமேல் நான் வில்லிதான் - வனிதா விஜயகுமார்

இனிமேல் நான் வில்லிதான் - வனிதா விஜயகுமார்

விஜய்க்கு ஜோடியாக படங்களில் நடித்து பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று அனைவரையும் கவர்ந்தவர் வனிதா விஜயகுமார் இவர் சமிபத்தில் நடந்த விழாவில் பேசிய வீடியோ வைரலாக பரவிவருகிறது.

 

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபலமான வனிதா விஜயகுமார் சமீபத்தில் தில்லு இருந்தா போராடு படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில் பேசியது வைரலாக பரவி வருகிறது. அந்த நிகழ்ச்சியில் அவர் பேசியது,

 

சினிமாவில் எனக்கு கிடைத்த இடத்தை நான் கோட்டை விட்டுவிட்டேன். முட்டாள்தனம் பண்ணி விட்டேன். இதை மிக தாமதமாக உணர்ந்தேன். இனிமேல், விட்ட இடத்தை பிடிக்கப் போகிறேன். இந்த படத்தின் டைரக்டர் முரளிதரன் என்னிடம் வந்து கதை சொன்னபோது, ‘பஞ்சாயத்து பரமேஸ்வரி’ என்ற வில்லி வேடத்தில் நடிக்க முடியுமா? என்று தயங்கி தயங்கி கேட்டார். நடிக்கிறேன் என்று நான் சொன்னதும், அவர் முகம் மலர்ந்தது.

 

வனிதா விஜயகுமார்

வனிதா விஜயகுமார்

 

வில்லி வேடத்தில் நடிக்க எனக்கு எந்த தயக்கமும் இல்லை. தொடர்ந்து வில்லியாக நடிக்க முடிவு செய்து இருக்கிறேன். இந்த படத்தில் எனக்கு ‘பஞ்சாயத்து பரமேஸ்வரி’ என்ற வில்லி வேடம். இதற்காக மோட்டார் சைக்கிள் ஓட்ட வேண்டும் என்றார்கள். எனக்கு கார் ஓட்ட தெரியும். வேகமாக ஓட்டுவேன். ஆனால், ‘பைக்’ ஓட்ட தெரியாது. படத்துக்காக புல்லட் ஓட்ட ஒரு நண்பரிடம் கற்றுக்கொண்டேன். படத்தில் நான் புல்லட் ஓட்டி வரும் காட்சி, ‘பந்தா’வாக இருக்கும். உலக மகா வில்லியாக தெரிவேன்.

 

இவ்வாறு அந்த நிகழ்ச்சியில் வனிதா விஜயகுமார் பேசினார்.

LATEST News

Trending News

HOT GALLERIES