வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த தனுஷ் பட நாயகி
தனுஷ் நடிக்கும் இருமொழிப்படமான வாத்தியில் இருந்து நாயகி சம்யுக்தா மேனன் விலகியதாக வந்த வதந்திகளுக்கு ஒரு புகைப்படத்தின் மூலம் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
மலையாள சினிமாவில் பல படங்கள் நடித்து பிறகு தமிழில் 2018-இல் வெளிவந்த களரி படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் சம்யுக்தா மேனன். இவர் தமிழில் சில படங்களே நடித்தாலும் மலையாள சினிமாவின் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தார். இவர் தனுஷ் நடிக்கும் வாத்தி படத்தில் ஒப்பந்தமாகியுள்ளதாக அறிவிப்பு வெளியானது.
அதனை தொடர்ந்து, இப்படத்தில் இருந்து சம்யுக்தா மேனன் விலகியதாக சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவிவந்தது. சிலர் இது வதந்தியே என்று பதிவிட்டு வந்திருந்தனர். இந்நிலையில் நடிகை சம்யுக்தா மேனன் இது வதந்தியே என்று உறுதிப்படுத்தும் வகையில் ஒரு பதிவிட்டிருக்கிறார்.
சம்யுக்தா மேனன்
சேலையில் தான் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, 'வாத்தி/ சார் என்னுடைய முதல்நாள்' என சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படத்தின் மூலம் இவர் வாத்தி படத்தில் இருந்து விலகவில்லை என்று பகிர்ந்து வருகின்றனர்.