தளபதி விஜய்யின் 'மாஸ்டர்' ஒருவருட கொண்டாட்டம்: லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட சூப்பர் ஸ்டில்!

தளபதி விஜய்யின் 'மாஸ்டர்' ஒருவருட கொண்டாட்டம்: லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட சூப்பர் ஸ்டில்!

தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான ‘மாஸ்டர்’ திரைப்படம் கடந்த ஆண்டு ஜனவரி 13-ஆம் தேதி வெளியான நிலையில் இன்றுடன் இந்த படம் வெளியாகி ஒரு வருடம் நிறைவு பெறுகிறது.

‘மாஸ்டர்’ படத்தின் ஒரு வருட நிறைவு விழா கொண்டாட்டத்தை ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கொண்டாடி வரும் நிலையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது டுவிட்டர் பக்கத்தில் சூப்பர் ஸ்டில் ஒன்றை வெளியிட்டுள்ளார். ‘மாஸ்டர்’ படத்தின் காட்சியை தளபதி விஜய்க்கு அவர் விளக்குவது போன்று இருக்கும் இந்த மாஸ் புகைப்படத்திற்கு ஏராளமான லைக்ஸ்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனா வைரஸ் இரண்டாவது அலையின் போது திரையரங்குகள் பல மாதங்களாக முடங்கிக் கிடந்த நிலையில் திரையரங்குகளுக்கு வருவதற்கே ரசிகர்கள் அச்சமடைந்த நிலையில் ரசிகர்களின் அச்சத்தை போக்கி திரையரங்கு உரிமையாளர்களுக்கு புத்துயிர் கொடுத்த படம் தான் ‘மாஸ்டர்’ என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஒரு வருட ‘மாஸ்டர்’ கொண்டாட்டத்தில் நானும் கலந்து கொள்கிறேன் என்றும் விஜய், விஜய் சேதுபதி, லலித்குமார் மற்றும் ரசிகர்கள் அனைவருக்கும் எனது நன்றி என்றும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

LATEST News

Trending News