வேறு ஒரு அம்மாவிடம் இருந்து எனக்கு கிடைத்த அக்கா: அதிதி ஷங்கர் குறித்து 'பிகில்' நடிகை!
வேற ஒரு அம்மாவிடம் இருந்து எனக்கு கிடைத்த அக்காதான் அதிதி ஷங்கர் என ‘பிகில்’ படத்தில் நடித்த நடிகை ஒருவர் தனது சமூக வலைத்தளத்தில் ஷங்கரின் மகள் குறித்து கூறியிருப்பது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.
சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், கார்த்தி நடிப்பில், முத்தையா இயக்கியுள்ள ‘விருமன்’ படத்தின் நாயகியாக பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் இரண்டாவது மகள் அதிதி ஷங்கர் நடித்துள்ளார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் விரைவில் இந்த படம் ரிலீசாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்த பிகில் நடிகை இந்திரஜா, அதிதி ஷங்கர் உடன் நடித்த போது ஏற்பட்ட அனுபவம் குறித்து தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். உண்மையான நண்பர்கள் எப்போதும் ஆத்மார்த்தமாக இருப்பார்கள் என்றும் இந்த வாக்கியம் அதிதி ஷங்கருக்க்கு சொல்வது போல உள்ளது என்றும், நாம் இருவரும் ஒரே விதமான ஆத்மா தான் என்றும் தெரிவித்துள்ளார்.
‘விருமன்’ படத்தின் படப்பிடிப்பில் நான் சந்தித்த மிகவும் அற்புதமான நபர் நீங்கள்தான் என்றும் வேறொரு அம்மாவிடமிருந்து எனக்கு கிடைத்த அக்கா என்றும் படப்பிடிப்பில் நடந்த அனைத்து மகிழ்ச்சிகளையும் ஜோக்குகளையும் நான் மிஸ் செய்கிறேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
நீங்கள் ஒரு மிகப் பெரிய இயக்குனரின் மகள் என்பதை கொஞ்சம் கூட காட்டிக் கொள்ளாமல் அனைவரிடமும் சகஜமாகப் பழகுனீர்கள் என்றும் உங்களிடம் இருந்த போது நான் மிகவும் சவுகரியமாக உணர்ந்தேன் என்றும் நீங்கள் வாழ்வில் மென்மேலும் வெற்றி அடைய வாழ்த்துகிறேன் என்றும் லவ் யூ தேனு என்றும் பதிவு இந்திரஜா பதிவு செய்துள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.