மீண்டும் ஊரடங்கு - ஆர்.ஆர்.ஆர். படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்

மீண்டும் ஊரடங்கு - ஆர்.ஆர்.ஆர். படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்

ராஜமவுலி இயக்கத்தில் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர். நடிப்பில் உருவாகி இருக்கும் ஆர்.ஆர்.ஆர். படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

மீண்டும் ஊரடங்கு - ஆர்.ஆர்.ஆர். படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்

ஆர்.ஆர்.ஆர் படத்தில் ராம் சரண் - ஜூனியர் என்.டி.ஆர்

பாகுபலி படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து ராஜமவுலி இயக்கத்தில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘இரத்தம் ரணம் ரெளத்திரம்’ (ஆர்.ஆர்.ஆர்). பிரபல தெலுங்கு நடிகர்கள் ராம்சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் தயாராகி உள்ளது. 

 

இப்படம் ஜனவரி மாதம் 7-ந் தேதி திரையரங்குகளில் ரிலீசாக இருப்பதாக படக்குழுவினர் அறிவித்து இருந்தனர். இந்நிலையில், கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், திரையரங்குகள் உள்ளிட்ட அனைத்து அரங்கங்களிலும் அனுமதிக்கப்பட்ட இருக்கைகளில் அதிகபட்சம் 50 சதவீத பார்வையாளர்களுடன் மட்டும் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

 

ஆர்.ஆர்.ஆர்

 

இதனால், ஆர்.ஆர்.ஆர் படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் ஏப்ரம் மாதம் படத்தை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

LATEST News

Trending News