ரசிகர்களுக்கு வாழ்த்து தெரிவித்த அஸ்வின்!

ரசிகர்களுக்கு வாழ்த்து தெரிவித்த அஸ்வின்!

குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்து அதன் பின்னர் திரையுலகில் ஹீரோவாக வாய்ப்பு பெற்றுள்ளவர் அஸ்வின் என்பதும் அவர் நடித்து முடித்துள்ள ’என்ன சொல்லப் போகிறாய்’ என்ற படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

ஹரிஹரன் இயக்கத்தில் டிரைடன்ஸ் ஆர்ட்ஸ் ரவீந்திரன் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படம் விரைவில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது. அஸ்வின் ஜோடியாக தேஜூ அஸ்வினி, அவனிகா மிஸ்ரா நடித்துள்ள இந்த படத்தில் புகழ், டெல்லி கணேஷ், சுப்பு பஞ்சு, சுவாமிநாதன் உள்பட பலர் நடித்துள்ளனர்.

மேலும் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்த போது அஸ்வின் பேசியது சர்ச்சைக்கு உரியதாக மாறியது என்பதும், சமூகவலைதளங்களில் நெட்டிசன்களால் கலாய்க்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் அஸ்வின் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து டுவிட் ஒன்றை பதிவு செய்துள்ளார். ’உங்கள் அனைவருக்கும் எனது மகிழ்ச்சியான புத்தாண்டு வாழ்த்துக்கள்’ என்றும் ’உங்கள் அன்பிற்கு என்றும் அடிமை’ என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

LATEST News

Trending News

HOT GALLERIES