ராஷ்மிகா இடத்தை பிடித்த அஞ்சலி

ராஷ்மிகா இடத்தை பிடித்த அஞ்சலி

தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் ராஷ்மிகா மந்தனாவின் இடத்தை அஞ்சலி தற்போது பிடித்திருக்கிறார்.

இந்தியன் 2 படத்தை இயக்கி வந்த ஷங்கர், தயாரிப்பு நிறுவனம் லைகாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, அப்படத்தை கைவிட்டு தெலுங்கில் ராம் சரண் நடிப்பில் ஒரு படத்தை இயக்கி வருகிறார். 

 

இந்தப் படத்தில் கொரியன் சிங்கர் சூஷி பே முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். அதோடு, படத்தில் நாயகியாக அலியாபட், கியாரா அத்வானி, மாளவிகா மோகனன் ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடந்தது. இந்தியா முழுவதும் படம் வெளியாக இருப்பதால் அனைத்து மொழி ரசிகர்களுக்கும் பரிட்சயமான நாயகியாக வேண்டுமென படக்குழு விரும்பியது. இறுதியாக, கியாரா அத்வானி நாயகியாக ஒப்பந்தமாகியிருக்கிறார்.

 

அஞ்சலி

அஞ்சலி

 

மேலும் ஒரு நாயகிக்காக தெலுங்கு நடிகை ராஷ்மிகா மந்தனாவிடம் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார்கள். இப்போதைக்கு, தெலுங்கின் முன்னணி நடிகையான இவரை, ஷங்கர் படத்தில் நடிக்கவைக்க விரும்பினார்கள். ஆனால், பெரும் தொகையை சம்பளமாகக் கேட்டிருக்கிறார் ராஷ்மிகா. அதோடு, சில கட்டுப்பாடுகளும் போட்டதாகத் தெரிகிறது. இதனால், இயக்குநர் ஷங்கர், ராஷ்மிகாவை நிராகரித்துவிட்டாராம். பின்னர், ராஷ்மிகா ரோலுக்கு நடிகை அஞ்சலியை ஒப்பந்தம் செய்துள்ளனர்.

LATEST News

Trending News

HOT GALLERIES