சிம்புவின் ‘பத்து தல’ படத்தின் ஷூட்டிங் அப்டேட்
கன்னடத்தில் சிவராஜ்குமார், ஸ்ரீமுரளி ஆகியோர் நடித்து வெற்றிபெற்ற ‘மப்டி’ படத்தை தமிழில் ‘பத்து தல’ என்ற பெயரில் ரீமேக் செய்கின்றனர்.
மாநாடு படத்தில் நடித்து முடித்துள்ள சிம்பு அடுத்ததாக ‘பத்து தல’ படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தில் கவுதம் கார்த்திக்கும் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தை சில்லுனு ஒரு காதல், நெடுஞ்சாலை போன்ற படங்களை இயக்கிய ஓபிலி என் கிருஷ்ணா இயக்க உள்ளார்.
நடிகை பிரியா பவானி சங்கர், டீஜே அருணாச்சலம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளனர். ஸ்டூடியோ கிரீன் சார்பாக கே.இ.ஞானவேல் ராஜா தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க உள்ளார்.
பத்து தல படத்தின் போஸ்டர்
இந்நிலையில், இப்படத்தின் ஷூட்டிங் குறித்த புதிய அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி அடுத்த மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது கன்னடத்தில் சிவராஜ்குமார், ஸ்ரீமுரளி ஆகியோர் நடித்து வெற்றிபெற்ற ‘மப்டி’ படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.