யோகி பாபுக்கு வேண்டுகோள் விடுத்த வீரப்பன் குடும்பத்தார்
மறைந்த வீரப்பன் குடும்பத்தார் தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வலம் வரும் யோகி பாபுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
’ராட்சசி’ பட இயக்குநர் சை கெளதம் ராஜ் மற்றும் பிரபாதீஸ் ஷாம்ஸ் ஆகியோர் இணைந்து கதை எழுத, அறிமுக
இயக்குநர் யாசின் இயக்கும் புதிய படம் ‘வீரப்பன் கஜானா’. காடுகளின் பெருமையை திகைப்பு மற்றும் நகைச்சுவை கலந்து உருவாகி வரும் இப்படத்தில் யோகி பாபு இதுவரை நடித்திராத வேடம் ஒன்றில் நடிக்கிறார்.
ஆம், யோகி பாபு முதல் முறையாக யூடியூபர்
வேடத்தில் நடிக்கிறார். ‘வீரப்பனின் கஜானா’ என்று தலைப்பு வைக்கப்பட்டிருந்தாலும், இப்படத்தின் கதைக்கும் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட வீரப்பனுக்கும் எந்த தொடர்பும் இல்லை.
யோகி பாபு - மொட்டை ராஜேந்திரன்
ஆனால், படத்தின் தலைப்பு தொடர்பாக படக்குழுவினரை தொடர்பு கொண்டு பேசிய மறைந்த வீரப்பன் குடும்பத்தார், வீரப்பன் என்ற பெயரை பயன்படுத்த வேண்டாம், என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர். அவர்களின் வேண்டுகோளை ஏற்று படக்குழுவினர் ‘வீரப்பனின் கஜானா’ என்ற தலைப்பை மாற்ற முடிவு செய்துள்ளனர். எனவே, இப்படத்தின் புதிய தலைப்பு, இதைவிட சுவாரஸ்யமான தலைப்பாக விரைவில் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளனர்.