ரொம்ப பெருமையாக இருக்கின்றது: மீராமிதுன் கைது குறித்து சக பிக்பாஸ் நடிகை!

ரொம்ப பெருமையாக இருக்கின்றது: மீராமிதுன் கைது குறித்து சக பிக்பாஸ் நடிகை!

நடிகை மீரா மிதுனை தமிழக காவல்துறை கைது செய்திருப்பது ரொம்ப பெருமையாக இருப்பதாக அவருடைய சக பிக்பாஸ் நடிகை ஒருவரே டுவிட்டரில் பதிவு செய்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நடிகை மீரா மிதுன் பட்டியல் இனத்தவர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக அவர் மீது 7 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் தன்னை கைது செய்ய முடியாது என்றும் தன்னை கைது செய்வது என்பது கனவில்தான் நடக்கும் என்றும் மீராமிதுன் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.

இந்த வீடியோ வெளியான அடுத்த நாளே அவர் கேரளாவில் பதுங்கி இருப்பதை கண்டுபிடித்த தமிழக காவல்துறையினர் கேரளாவில் அவரை கைது செய்தனர். தமிழக போலீசார் கைது செய்யும்போது போலீசாரை மிரட்டும் வகையில் ஒரு வீடியோவை மீராமிதுன் வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் மீராமிதுன் கைது குறித்து பலர் காவல்துறையினர்களுக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகையும் பிக் பாஸ் போட்டியாளர்களில் ஒருவருமான சனம்ஷெட்டி, மீரா மிதுன் கைது குறித்து கூறுகையில் ’மீராமிதுனை தமிழக காவல்துறையினர் கைது செய்திருப்பது பெருமைக்குரிய ஒரு நடவடிக்கையாகும். சைபர் க்ரைம் காவல்துறையினர் மிகச்சரியான ஒரு நடவடிக்கையை இன்று எடுத்துள்ளனர். கடந்த சில வருடங்களாக நாங்கள் சகித்துக் கொண்ட அனைத்து வெறுக்கத் தக்க பேச்சுக்களும் இனி முடிவுக்கு வரும்’ என்று அவர் தெரிவித்துள்ளார். சனம் ஷெட்டியின் இந்த டுவிட் தற்போது வைரலாகி வருகிறது.

LATEST News

Trending News