விபத்தில் ஏற்பட்ட வலியையும் பொருட்படுத்தாமல் படப்பிடிப்பில் கலந்து கொண்ட நடிகர்!

விபத்தில் ஏற்பட்ட வலியையும் பொருட்படுத்தாமல் படப்பிடிப்பில் கலந்து கொண்ட நடிகர்!

படப்பிடிப்புக்கு செல்லும்போது விபத்து நடந்த நிலையில் விபத்தில் காயம் அடைந்த போதிலும் அதனை வெளிக்காட்டிக் கொள்ளாமல் படப்பிடிப்பில் கலந்து கொண்ட நடிகர் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் ஒன்று ’பாண்டியன் ஸ்டோர்ஸ்’. இந்த தொடரில் கடைக்குட்டிசெல்லம் கண்ணன் கேரக்டரில் நடித்து வருபவர் சரவணன் என்பது அனைவரும் அறிந்ததே
இவர் சமீபத்தில் பாண்டியன் ஸ்டோர் படப்பிடிப்புக்கு செல்லும்போது விபத்தில் சிக்கினார். இருப்பினும் உடல் முழுவதும் வலி இருந்தபோதிலும் விபத்து நடந்தது குறித்து யாருக்கும் கூறாமல் பாண்டியன் ஸ்டோர்ஸ் படப்பிடிப்பில் கலந்து கொண்டார். அதன்பின்னரே அவர் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

இதுகுறித்து கண்ணனின் தங்கை தனது இன்ஸ்டாகிராம் ஒரு பதிவு செய்துள்ளார். அதில் பாண்டியன் ஸ்டோர்ஸ் படப்பிடிப்புக்கு செல்லும்போது எனது சகோதரர் வாகனம் ஓட்டும்போது விபத்து ஏற்பட்டு படுகாயம் அடைந்த போதிலும் வலியை பொருட்படுத்தாமல் அவர் படப்பிடிப்புக்கு சென்று நான்கு மணி நேரம் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார். அதன்பிறகும் விபத்து குறித்து யாரிடம் சொல்லாமலேயே வீட்டிற்கு திரும்பியுள்ளார். அவரது மன உறுதியை பார்த்த பிறகு நான் அவரை நினைத்து பெருமைப்படுகிறேன்’ என்று கூறியுள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

LATEST News

Trending News