சூரரைப் போற்று திரை விமர்சனம்
ஒட்டு மொத்த தமிழ் சினிமா ரசிகர்களும் ஆவலுடன் எதிர்ப்பார்த்து காத்திருக்கும் படம் சூரரைப் போற்று. சுதா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பில் இருந்து திரையரங்கில் வெளிவராமல் முதன் முறையாக OTTயில் வெளிவந்துள்ள முன்னணி நடிகரின் படம், OTT என்றாலே தமிழ் ரசிகர்களுக்கு இத்தனை நாட்கள் கசப்பு தட்ட இந்த படமாவது இனிப்பு கொடுத்ததா? என்பதை பார்ப்போம்.
கதைக்களம்
சூர்யா படத்தின் ஆரம்பத்திலேயே ஒரு விமானத்தை அத்துமீறி தரை இறக்குகிறார். அதிலிருந்து தொடங்குகிறது படம்.
சூர்யா நெடுமாறன் ராஜாங்கம் நினைவு எளிய மக்களையும் விமானத்தில் குறைந்த பணத்தில் பறக்ல வைக்க வேண்டும் என்ற கனவுடன் போராடி வருகிறார்.
அவர் கனவிற்கு பலர் முட்டுக்கட்டை போடுகின்றனர், ஏதாவது ஒரு வழியில், அந்த நேரத்தில் விமான பிஸினஸில் கொடிக்கட்டி பறக்கும் பரீஷ் என்பவரை சூர்யா சந்தித்து தன் யோசனைகளை சொல்கிறார்.
சூர்யா ஒரு கிராமத்தான், அவர் எப்படி இப்படி ஒரு யோசனையை வைத்துக்கொண்டு சுத்தலாம், என்று பரீஷ் திட்டம் போட்டு அவர் கனவை தவிடு பொடியாக்குகிறார்.
இத்தனை பெரிய பிஸினஸ் மலையை தாண்டி சூர்யா எப்படி தன் விமானத்தை இந்த வானில் பறக்ல வைக்கிறார் என்பதே படத்தின் கதை.
படத்தை பற்றிய அலசல்
சூர்யா தன் கதாபாத்திரத்தில் வாழ்ந்துவிட்டார், இப்படி ஒரு கம்பேக் கதாபாத்திற்காக தான் சூர்யா காத்திருந்தார் போல, ஒவ்வொரு இடத்திலும் தன் முத்திரையை பதிக்கின்றாத்.
சூர்யாவிற்கு எளிய மக்களும் விமானத்தில் பறக்க வேண்டும் என்ற யோசனை எப்படி வந்தது என்று காட்டும் இடம் அருமை. அதோடு தன் தந்தை மரம தருவாயில் இருக்க அவரை பார்க்க பணம் இல்லாமல் பயணம் செய்ய முடியாமல் அவர் கெஞ்சும் இடம் எத்தனை விருதுகளை வேண்டுமானாலும் சூர்யாவிற்கு அள்ளிக்கொடுக்கலாம்.
சூர்யாவிற்கு போட்டியாக அபர்ணா, பல இடங்களில் கவுண்டர் கொடுத்து சூர்யாவையே திக்குமுக்காட வைக்கிறார், அதோடு தன் கணவன் கஷ்டத்தை அறிந்து கடைசி வரை கூட நிற்பது, ஆணுக்கு எந்த விதத்திலும் பெண் சளைத்தவள் இல்லை என்பதையும் காட்சியின் வழியே காட்டியுள்ளனர்.
இப்படம் ஏ செண்டர் ஆடியன்ஸுக்கானது என்று பலரும் சொன்னார்கள், ஆனால், அனைவருக்குமான படம் என்று அவ்வளவு பெரிய பிஸினஸ் மேனை உடுப்பி ஹோட்டகுக்கு அழைத்து வந்து விமான பிஸினஸை சூர்யா விவரிக்கும் இடம் தியேட்டராக இருந்தால் அப்லாஸ் அள்ளியிருக்கும்.
படம் ஒரு தனி நபர் பயோகிராபி தான் என்றாலும், அதை அனைவரும் ரசிக்கும்படி குறிப்பாக இன்றைய இளைஞர்களுக்கு ஒரு மோட்டிவேஷ்னலாக திரைக்கதையாக அமைத்தது சுதா தனி முத்திரை பதித்துவிட்டார்.
காளி வெங்கட், கருணாஸ், ஊர்வசி, மோகன்பாபு, சூர்யாவின் அப்பவாக வருபவர் என அனைவருமே நிறைவான நடிப்பை கொடுத்துள்ளனர்.
பரீஷ், பாலையா என நிகழ்கால பிஸினஸ் மேன்களை தைரியமாக அவர்கள் முகத்திரையை கிழித்தது சுதாவின் பெரும் தைரியம்.
படத்தின் திரைக்கதைக்கு உயிரோட்டமாக இருப்பது ஜி.வி.பிரகாஷ் இசை, அசுர பாய்ச்சல். ஒளிப்பதிவும் விமானத்தின் வேகத்திற்கு இணையாக படம்பிடித்துள்ளனர், குறிப்பாக சூர்யா தன் புல்லட்டில் விமானத்தை பார்த்துக்கொண்டே ஓட்டும் இடம்.
இப்படி பல ப்ளஸ் குவிந்து இருக்க, ஒரு சில இடங்களில் ஊர் மக்கள் காட்டும் இடம் கொஞ்சம் செயற்கைத்தனமாக தெரிவதை தவிர்க்க முடியவில்லை.
க்ளாப்ஸ்
சூர்யா நீண்ட நாட்களுக்கு பிறகு தன் நடிப்பொ மிரட்டியுள்ளார்.
சுதாவின் திரைக்கதை.
ஜி.வி இசை, ஒளிப்பதிவு.
படத்தின் வசனங்கள், அதுவும் எளிய மக்களுக்காக சூர்யா பேசும் காட்சிகள்.
பல்ப்ஸ்
மதுரை காட்சிகளில் கொஞ்சம் செயற்கை தனம் தெரிகிறது.