சஞ்சீவ்க்கும் எனக்கும் இருக்கும் உறவுமுறை: வனிதா அறிவிப்பை கேட்டு அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள்!

சஞ்சீவ்க்கும் எனக்கும் இருக்கும் உறவுமுறை: வனிதா அறிவிப்பை கேட்டு அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள்!

நடிகையும் பிக் பாஸ் போட்டியாளர்களில் ஒருவருமான வனிதா குறித்த சர்ச்சை கருத்துக்கள் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருக்கும் என்பதும், அதற்கு அவர் தனது சமூக வலைத்தளத்தில் விளக்கமளித்து கொண்டிருப்பார் என்றும் தெரிந்தது. குறிப்பாக சமீபத்தில் அவர் நான்காவது திருமணம் குறித்த வதந்தி கிளம்பிய போது அதற்குரிய விளக்கத்தை அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். திருமணம் ஒன்றில் கலந்துகொள்ள சென்றபோது எடுத்த புகைப்படத்தை தான் அவர் பதிவு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதில் குறிப்பாக சுரேஷ் சக்கரவர்த்தி, சஞ்சீவ், ப்ரீதாவுடன் எடுத்த செல்பி புகைப்படங்களை பதிவு செய்துள்ளார்.

அதில் சஞ்சீவுடன் எடுத்த புகைப்படத்தை பதிவு செய்த அவர் 'என்னுடைய சகோதரர்' என்று அவர் குறிப்பிட்டு உள்ளார். இதனை அடுத்து அவருடைய ரசிகர்கள் ’சஞ்சீவ் எப்படி உங்களுக்கு சகோதரர் ஆவார்'? என்று கேள்வி எழுப்பிய நிலையில் இது குறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார். அந்த விளக்கத்தில் ’தன்னுடைய தாயார் மஞ்சுளாவின் சகோதரி ஷ்யாமளா மகன் தான் சஞ்சீவ் என்றும், அதனால் சஞ்சீவ் எனக்கு சகோதரர் தான்' என்று குறிப்பிட்டுள்ளார். வனிதாவுக்கும் சஞ்சீவ்க்கும் இடையே உள்ளது அக்கா-தம்பி உறவு என்பது இதுவரை பலருக்கு தெரியாமல் இருந்த நிலையில் தற்போது அது தெரிந்த நிலையில் அனைவரும் ஆச்சரியப்பட்டும் இன்ப அதிர்ச்சி அடைந்தும் வருகின்றனர்.

LATEST News

Trending News

HOT GALLERIES