பாக்ஸ் ஆபிஸ்: 6 நாட்களில் மீசைய முறுக்கு 2 திரைப்படம் செய்துள்ள வசூல்
மீசைய முறுக்கு 2
ஹிப்ஹாப் ஆதி நடித்து, இயக்கி, இசையமைத்து உருவாகி வெளிவந்த திரைப்படம் மீசைய முறுக்கு 2. இப்படத்தை அவ்னி மூவிஸ் மற்றும் பென்ஸ் மீடியா இணைந்து தயாரித்துள்ளன.

இப்படத்தில் ஆதியுடன் இணைந்து ரம்யா ரங்கநாதன், சைத்ரா அச்சர் மற்றும் கெத்திகா ஷர்மா என மூன்று கதாநாயகிகள் நடித்துள்ளனர். மேலும், கருணாஸ், நாசர், பாபா பாஸ்கர், ஹர்ஷத் கான் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
வசூல் விவரம்
கடந்த வாரம் திரைக்கு வந்த இப்படம் ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்று வருகிறது. ஓரிரு தினங்களுக்கு முன் இப்படத்தின் வெற்றியை படக்குழுவினர் அனைவரும் இணைந்து கொண்டாடினார்கள்.
இந்த நிலையில், மீசைய முறுக்கு 2 திரைப்படம் 6 நாட்களில் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 6 நாட்களில் இப்படம் ரூ. 35 கோடி வசூல் செய்துள்ளது.