ஓரளவுக்கு வடை சுடலாம், அதுக்குன்னு இப்படியா! மீசையை முறுக்கு 2 பரிதாபங்கள்
ஹிபிஹாப் ஆதி நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் இருந்த படம் மீசையை முறுக்கு 2. இப்படம் கடந்த வெள்ளி அன்று ரிலீஸ் ஆகி ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.
அதிலும் குறிப்பாக ஜென் சி இளைஞர்களிடம் இப்படம் கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் இப்படத்தின் 3 நாள் வசூல் என ஒன்றை அறிவித்துள்ளனர், இதை கண்டு ரசிகர்கள் பலரும் ஷாக் ஆகியுள்ளார்.

ஆம், மூன்று நாட்களில் இப்படம் ரூ 51 கோடி வசூல் செய்ததாக கூறியுள்ளனர். ஆனால, உண்மையாக இப்படம் 3 நாள் முடிவில் ரூ 30 கோடி வரை தான் வசூல் செய்திருக்கும், படத்தின் ப்ரோமோஷனுக்காக இப்படி அளந்து விடுகிறார்கள் என பாக்ஸ் ஆபிஸ் நிபுணர்கள் கூறுகின்றனர்.
வந்த வசூலை நல்ல வசூல் தான், படமும் நல்ல வரவேற்பு, நல்ல ஹிட்டும் கூட, அப்படியிருக்க ஏன் இப்படி ஒரு வசூல் வடையை சுட வேண்டும் என்பதே எல்லோரின் கேள்வியும்.
